அடுத்த பிரதமர் யார்? 18 ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம்
இம்மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜனாதிபதியின் தீர்மானத்தின் படி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதுடன் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பிரதியமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமாயிருந்தால் அனேகமாக அந்தப் பதவி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கோ அல்லது சிரேஷ்ட அமைச்சரான ரத்னசிறி விக்கிரமநாயக்கவுக்கோ அல்லது அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவுக்கோ கிடைக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த சில மாதங்களுக்குள் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதும் பல்வேறு காரணங்களினால் அது ஒத்தி வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment