யாழ்ப்பாணத்தில் கஞ்சாப் பாவனை அமோகம் கடந்த வாரத்தில் மட்டும் 17 பேர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் கஞ்சாவை விறப்னைக்காக வைத்திருந்த 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்ய்பபட்டனர். இவர்களிடமிருந்து விற்பனைக்கான கஞ்சாப் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணத்தில் 2 பேரும், சாவகச்சேரியில் 2 பேரும், கொடிகாமத்தில் ஒருவரும், கோப்பாயில் ஒருவரும், சுன்னாகத்தில் 2 பேரும், ஊர்காவற்றுறையில் 9 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.
0 comments :
Post a Comment