ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு இதுவரை 16 பலி பலர் காயம்
ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடமபெற்ற பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு பல காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தைச் சுற்றில் இன்று தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தாஜி நகர் ராணுவ முகாம் அருகில் கார் குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் முகமதியா நகரில் தற்கொலைப் படை தீவிரவாதி கார் குண்டை வெடிக்கச் செய்தான். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதன்பின்னர் வடக்கு பாக்தாத்தில் உள்ள ஷாலா மார்க்கெட் அருகில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சன்னி போராளிக் குழுவினர் அரசை சீர்குலைக்கும் வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால், அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment