15 வயது சிறுமி மீது பலாத்காரம்,தப்பிய சிறுமியை காமுனின் பெற்றோர் தீ மூட்டி கொல்ல முயற்சி
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கர்கர்க் எனும் கிராமத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காமுகனிடம் இருந்து தப்பி உதவி கோரிய சிறுமியை காமுகனின் பெற்றோர் உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த கியான்படேல் என்பவர் நேற்று தன் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
சிறுமியின் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தபோது, அந்த சிறுமி தனிமையில் இருப்பதை பயன்படுத்தி, அவளை கியான்படேல் கற்பழிக்க முயன்றார். அவர் பிடியில் இருந்து தப்பிய சிறுமி உதவி கோரி கூச்சலிட்டார்.
அப்போது கியான் படேலின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்கள் சிறுமி மீது மண்எண்ணையை ஊற்றினார்கள். பிறகு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
உடல் முழுக்க தீ பற்றி எரிந்த நிலையில் அந்த சிறுமி அலறினாள். சத்தம் கேட்டு ஊரார் வந்து தீயை அணைத்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமிக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்குப் போராடி வரும் அவளை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அலகாபாத் பொலிஸார் சம்பவம் நடந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை உயிரோடு எரித்த கியான்படேல் மற்றும் அவர் பெற்றோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர் அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
0 comments :
Post a Comment