Saturday, January 19, 2013

செவ்வாயில் 1500 கிலோ மீற்றர் நீளமான ஆற்றைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை !

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் செவ்வாயில் குடியேறலாம் என்ற கருத்தும் இதனைத் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment