Monday, January 7, 2013

உலகில் 15 க்கு ஒருவர் அரச சேவையிலுள்ள ஒரே நாடு இலங்கையே!

(கலைமகன் பைரூஸ்)‘நாட்டுப் பிரஜைகளில் 15 பேரில் ஒருவர் அரசாங்க சேவையிலுள்ள ஒரே நாடு இலங்கையே. அந்த அரச சேவையில் உள்ளவருக்கான ஊதியத்தை வழங்குவதும் நாட்டுப் பிரஜைகளே. அதனால் அவர்களுக்கு மனநிறைவான, சிறந்த சேவையை வழங்க வேண்டியது கடமையாகும்.’ இவ்வாறு கிழக்கின் ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, எங்கள் நாட்டில்தான் அரச ஊழியர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றாலும் அவர்களில் ஒருசிலரின் ஒழுங்கீனமான, துர்நடவடிக்கைகளினால் எங்கள் நாட்டின் அரச சேவை சிலநேரங்களில் குற்றச்சாட்டுக்களுக்கும் இலக்காகின்றது. இது மறைக்க முடியாத உண்மை. அரசாங்கம் உங்களது இலவசக் கல்விக்காக கூடுதலான பணத்தைச் செலவு செய்துள்ளது. அதற்காக செய்ந்நன்றிக் கடனுக்காக எங்கள் நாட்டின் அபிவிருத்தியை உள்ளத்தில் கொண்டு பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். வளர்ச்சி கண்டு வருகின்ற எமது நாட்டின் அபிவிருத்தியைப் பொறுக்கவியலாத சில மேற்குலக நாடுகள் ஆட்சிமுறையை சின்னாபின்னமாக்குவதற்காக முயன்று வருகின்றன.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com