கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் ஊடகச் செயலமர்வுக்கான பதிவுகள் ஜனவரி 15-20 வரை
துருவம் ஊடக வலையமைப்பு CIMS CAMPUS உடன் இணைந்து நடாத்தும் இருநாள் ஊடக செயலமர்வுக்கான பதிவுகள் இம்மாதம் 15 தொடக்கம் 20 வரை நடைபெறவுள்ளது. பங்குபற்ற விரும்புபவர்கள் தங்களது பெயர்களை, சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள CIMS CAMPUS இன் கிளைக் காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஊடகத்துறையில் பணியாற்றுவோர், பணியாற்ற விரும்புவோர் மற்றும் உயர்தர மாணவர்களை கருத்திற்கொண்டு இச்செயலமர்வு நடாத்தப்படுகிறது. இச்செயலமர்வில் ஊடகத்துறை சார்ந்த பிரபல்யமிக்க வளவாளர்களைக் கொண்டு விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
ஜனவரி 26, 27ஆம் திகதிகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். 0672225600, 0716642992, 0774082527.
0 comments :
Post a Comment