அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற 14 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்-கடத்தியவர்கள் பொலிஸில் சிக்கினர்
மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற 14 வயது சிறுமியைக் ஆட்டோவில் கடத்திச் சென்ற வாலிபர் ஒருவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. உறவினர் வீட்டிலிருந்து ஆலயத்திற்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதன் பின்னர் இது தொடர்பில் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் கோண்டாவிலுள்ள வீடென்றில் இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இதன்போது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸாருக்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கடத்தலுக்கு பயனபடுத்திய ஆட்டோவையும் வீட்டின் உரிமையாளரையும் சேர்ந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 comments :
Maximum punishment is the best treatment for this type of criminals.
Post a Comment