இரத்தத்தைகொடுத்தேனும் 13 ம் திருத்தச் சட்டமூலத்தை காப்பாற்றுவோம் என்கிறார் வாசு!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார கடந்த வாரம் ஐலென்ட பத்திரிகைக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். செவ்வியில் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து கேட்டகப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் தமது கட்சி நிலைப்பாடு குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பின்வருமாறு கூறினார்:
'மாகாணசபைகள் முறைமையைப் பாதுகாப்பதில் எமது கட்சி பூரண ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் உள்ளது. எமது இரத்தத்தைக் கொடுத்தேனும் மாகாணசபை முறைமையைப் பாதுகாப்பதுடன், ஜனநாயக வழி முறைகளினூடாக பூரணமான அதிகாரப் பகிர்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
தற்பொழுது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மகிந்த சிந்தனையிலும் திட்டங்களிலும் 13ஆவது திருத்தத்தின் தொடர்ச்சியும், மாகாண சபைகளும் இணைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை அங்கீகாரத்துக்காக நாட்டின் முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் திட்டங்களில் 13ஏ என்பது முடிந்து போன, நடைமுறையில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்றாகும்'.
மேலும் அவர் கூறுகையில், 'தற்போதய அரசாங்கமானது ஐ.தே.க ஆட்சியையோ அல்லது ஜே.வி.பி பாணியிலான அராஜக ஆட்சியையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்தும் பிரிவினைவாத சிந்தனையுள்ள அரசாங்கத்தையோ எதிர்க்கும் வௌ;வேறு விதமான சக்திகளை
அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சக்திகளுக்குள் முரண்பாடுகளும் உள்ளன. அரசியல் மற்றும் பொருளாதார தத்துவார்த்தங்களில் முரண்பாடான சிந்தனைகள் உள்ளன. தேசிய இனப் பிரச்சினை மற்றும் அதிகாரப் பகிர்வு என்பனவற்றிலும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் முரண்பாடான சிந்தனை உள்ளது. இந்த முரண்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் உள்ள சக்திகளின் சம நிலையின் அடிப்படையில் குறிப்பிட்ட சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொள்கைத் தீர்மானங்களைப்
பாதிக்காது.'
என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment