நாட்டில் விடுதலைப்புலிகள் 1200 பேர் இன்னமும் கைது செய்யப்படாமல் மறைந்துள்ளனர், பல வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இலங்கையில் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாமலும் கைது செய்யப்படாத நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 1200 பேர் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சினை சுட்டி பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு புலி சந்தேகநபர்கள் 400 பேர் இன்னமும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த 1200 பேரிலும் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் வசிப்பதாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment