இந்துத்துவ பயங்கரவாதிகள் 10 பேர் பெயரை வெளியிட்டது மத்திய அரசு!
பாரதிய ஜனதாவும் அதன் தாய் வீடான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயிற்சியை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஷிண்டேயின் கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்தும் உறுதிபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதனை உறுதிப்படுத்தும் வகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவாஸ் மற்றும் முவா இயக்கத்தில் 1990 முதல் 2003 வரை இருந்த சுனில் ஜோஷி் சம்ஜவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். இதே குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, இந்தூரைச் சேர்ந்த சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் இயக்கத்தில் 1990 முதல் 2006 வரை இருந்தவர். தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்
லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்யவஹாக் அமைப்பையும், சுவாமி அஸீமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யான் இயக்கத்தையும், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ்ஸின் வர்க் விசாரக் அமைப்பையும் சேர்ந்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்கள் மட்டுமில்லாமல், குஜராத்தை சேர்ந்த முகேஷ் வசானி கோத்ரா என்கிற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர், தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் அமைப்பினைச் சேர்ந்தவர், சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் 2007 இயக்கத்தையும், கமல் சௌகான் பிரச்சாரக்கின் கிளை இயக்கத்தையும், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்" என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment