Saturday, January 19, 2013

10 GB கோப்புக்களையும் இனி ஜி.மெயிலில் அனுப்பலாம் !

உலகில் பெரும்பாலான நபர்கள் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல், கோப்புகளையும் இணைத்து அனுப்புவர். இதுவரையிலும் 25 MB அளவு கொண்ட கோப்புகளை மட்டுமே அனுப்ப முடிந்தது.ஆனால் இனிமேல் 10 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு Google Drive-வை இணைத்துள்ளது.

இதனால் Drive மூலம் நேரடியாக கோப்புகளை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். இந்த வசதியை பெற ஜிமெயில் உறுப்பினர்கள், ஜிமெயிலின் அப்டேட் பதிப்பை பயன்படுத்த வேண்டும்.

மேலும் கோப்புகளை அனுப்பும் போது ஜிமெயில் அவற்றை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் என்று கூகுளின் தயாரிப்பு மேலாளர் பில் ஷார்ப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள Drive icon-யை கிளிக் செய்து, கோப்புகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment