Tuesday, December 25, 2012

TNA ஆட்சி பிரதேச சபை வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ம் ஆண்டுக்காக வரவு - செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை சபையில் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட போது திட்டத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்து செயற்பட்டு வரு இவ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச பொது நூலக கேட்போர் கூடத்தில் தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற போதே இது தோற்கடிக்கப்பட்டுள்ளது

வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக சபை உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிரதேசத்தில் உள்ள இரு மதுபானசாலைகளையும் அகற்றவேண்டும் என சகல உறுப்பினர்களும் தீர்மான் எடுத்துள்ளதுடன் இது தொடர்பாக மதுவரி திணைக்களம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதாகவும் வேறு மதுபானசாலைகளும் இனி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏக மனதாக தீர்மானித்தனர்.

சபை ஆரம்பிக்கப்பட்டு 21 சபை அமர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் இது வரை நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவையும் சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை எனகுற்றம் சுமத்தப்பட்டதுடன் சபையின் நிதிக்குழு, அபிவிருத்திக்குழு என்பவற்றின் அங்கீகாரம் இன்றி பல செலவுகள் செய்வதாக தவிசாளருக்கு எதிராக உப தவிசாளர் சி.சியாம் சுந்தர், உறுப்பினர் காளிதாசன், மற்றும் எதிக்கட்சியின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ரகுபதி, சந்திரகுமார் ஆகிய நான்கு உறுப்பினர்களும் சேர்நது குற்றம் சுமத்தி சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.

இதனையடுத்து இவ்வரவு செலவுத் - திட்டம் நிறைவேற்றுவதற்கான சபை அமர்வு எதிர்வரும் 31 ம் திகதி திங்கட்கிழமை நடாத்த ஏனைய சபை உறுப்பிர்களால் தீர்மானிக்கப்பட்டு சபை அமர்வுகள் முடிவுற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com