Friday, December 21, 2012

முதல் T20 யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் புனேயில் நடைபெற்ற முதலாவது டுவெண்டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. ஹேல்ஸ் 56 ஓட்டங்களையும், ரைட் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில், யுவராஜ் சிங் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

யுவராஜ் சிங் 38 ரன்களையும், சுரேஷ் ரைனா 26 ஓட்டங்களையும் குவித்தனர். இரு போட்டிகள் கொண்ட டுவெண்டி20 யில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com