பார்வையற்றோருக்கான T20 உலக கோப்பை :பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பார்வையற்றோருக்கான T20 உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்திய் இந்தியா கோப்பையை வென்றது.பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியின் கேடன் பாய் படேல், 43 பந்துகளில் 98 ரன்களை விளாசினார்.
பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி 229 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இந்திய அணிக்கு அதிகளவு ரசிகர்கள் மைதானத்தில் உற்சாகப்படுத்தியதால் பாகிஸ்தானின் சிறிது பதற்றமாகவே விளையாடியது. முன்னதாக பாகீஸ்தான் தொடர்ந்து 8 போட்டிகளில் வென்றிருந்தது. இதில், இந்தியாவை வீழ்த்திய போட்டியும் அடங்கும்.
கடந்த 2006 உலக கோப்பை T20யில் இந்திய அணி பாகிஸ்தானிடம் வீழ்ந்திருந்தது. அதற்கு தற்போது சிறந்த முறையில் பழிவாங்கியுள்ளது.
0 comments :
Post a Comment