காங்கிரஸ் ஆளும் கேரளாவில் FDI க்கு அனுமதி இல்லை!!
காங்கிரஸ் ஆளும் கேரளாவில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதியை தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதும் அனுமதிக்காததும் அந்தந்த மாநில முதல்வர்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி, காநிராஸ் ஆளும் கேரளாவில் FDI க்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி.
மேலும் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடமும் தான் தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார் உம்மன்சாண்டி. இருவருமே தனது இந்த திட்ட வட்ட முடிவு பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment