Thursday, December 13, 2012

எகிப்திய நெருக்கடிக்கு முர்சி இராணுவத்தை அழைக்கிறார். By Patrick Martin

எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சி ஞாயிறன்று "பொது ஒழுங்கைப் பராமரிக்கும்" நோக்கத்துடன் இராணுவ அதிகாரிகளுக்கு அடுத்த வாரத்திற்கு கைது செய்யும் அதிகாரங்களை ஒரு ஆணை வெளியிட்டதன் மூலம் கொடுத்துள்ளார். எகிப்தில் அரசியல் நெருக்கடி ஆழமடைகையில் பொலிசிற்கு உதவியாக இராணுவத்தை அழைத்திருப்பது எகிப்தில் திரைமறைவாக நடக்கும் பிற்போக்குத்தனமான தயாரிப்புகளின் அடையாளம் ஆகும்.

புதிய 107வது சட்டம் எகிப்தில் புதிய அரசியலமைப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள டிசம்பர் 15 பொதுஜனவாக்கெடுப்பு வரையிலான வாரம் வரை இராணுவத்தைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை கொடுக்கின்றது. இவ் அரசியலமைப்பு முர்சியின் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஒரு குழுவினால் இயற்றப்பட்டது; இக்கட்சி எகிப்திய பெரு வணிகத்தின் இஸ்லாமியப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் அரசியல் பிரிவு ஆகும்.

இந்த ஆணை ஒரு நாள் முன்னதாக முர்சி வெளியிட்ட அரசியலமைப்பு பற்றிய அறிவிப்பைத் தொடர்கிறது; அது டிசம்பர் 15ம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள இஸ்லாமியவாத ஆதரவுடைய அரசியலமைப்பை ஆதரிப்பதை உறுதிபடுத்தியது. இப்புதிய அறிவிப்பு பெயரளவிற்கு நவம்பர் 22 ஆணையை அகற்றியது. அது நாடு முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டியது; அதற்குக் காரணம் அது அனைத்து சட்டமியற்றுதல், நீதித்துறை, அரசியலமைப்பு மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பற்றியதோடு மட்டும் இல்லாமல், ஜனாதிபதிக்கு எவ்விதமான நீதித்துறை, சட்டக்கட்டுப்பாடுக்கும் மேலாக அதிகாரத்தை கொடுத்தது.

ஆனால், புதிய அரசியலமைப்பு அறிவிப்பு முழுமையாக நவம்பர் 22 அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட முழு அதிகாரத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் இப்புதிய ஆணையும் பிற அத்தகைய அரசியலமைப்பு அறிவிப்புக்களும் நீதித்துறையினால் பரிசீலிக்கப்படவோ, அகற்றப்படவோ முடியாது என்று வலியுறுத்துகின்றது.

சனிக்கிழமை இரவு செய்தியாளர் கூட்டத்தில் அரசியலமைப்பு அறிவிப்பைப் படித்த முர்சியின் உதவியாளர் ஒருவர்: "இந்த அறிவிப்பு சட்ட முறையீடுகளுக்கு எதிராக ஜனாதிபதியின் முடிவுகளை பாதுகாக்கும் நோக்கம் உடையது அல்ல; மாறாக அரசியலமைப்பு அறிவிப்புக்களைக் பாதுகாத்தல் என்பதுதான். இது ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் இறைமையுள்ள அதிகாரம் ஆகும்" எனக்கூறினார்.

சனிக்கிழமை ஆணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, Ahram Online இல் வெளியிட்டுள்ளபடி, முர்சி தன் நவம்பர் 22 ஆணையை அகற்றிவிட்டார் என்றும் அதே நேரத்தில் "அதன் முக்கிய விளைவுகள் அனைத்தும் நடைமுறையில் உள்ளது" என்றும் வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரியப்படுத்துகிறது. இத்தகைய விளைவின் மிக முக்கியமான தன்மை புதிய அரசியலமைப்பு பற்றிய டிசம்பர் 15 வாக்கெடுப்பு ஆகும்.

இப்புதிய அரசியலமைப்பு பற்றிய அறிவிப்பு எகிப்திய மக்கள், வரைவு அரசியலமைப்பை எதிர்த்து வாக்களிக்கின்றனர் என்றால், ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய அரசியலமைப்பு மன்றம் தேர்ந்தெடுக்கப்பட அழைப்புவிடுவார் என்று கூறுகிறது.

முர்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் எதிர்த்தரப்புக் குழுக்கள் இப்புதிய அறிவிப்பை உடனடியாக நிராகரித்தனர். ஆனால் டிசம்பர் 15 வாக்கெடுப்பை பகிஸ்கரிக்க அழைப்புவிடுவார்களா அல்லது எதிர்ப்புக்கள் மூலம் அதைத் தடைக்கு உட்படுத்த முற்படுமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு முன்வைக்கப்படும் அரசியலமைப்பை நிராகரித்து வாக்களிக்குமாறு கேட்குமா என்பது பற்றி மௌனமாக உள்ளன.

NSF எனப்படும் நாட்டை பாதுகாக்கும் முன்னணி, பல முதலாளித்துதவ தாராளவாத எதிர்க்குழுக்களைக் கொண்டுள்ளது, நவம்பர் 22 ஆணையை முர்சி அகற்றியது, "எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யவில்லை" என்று கூறுகிறது. ஒரு NSF அதிகாரி கூறினார்: "முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று அரசியலமைப்பின்மீது வாக்கெடுப்பை ஒத்திப்போட வேண்டும் என்பதாகும். இதற்கு பதிலளிக்காதுவிடுவது இன்னும் மோதலுக்குத்தான் வழிவகுக்கும்."

இதன் செய்தித் தொடர்பாளர் ஹாலெத் தாவூத், முர்சியின் செயல் "ஒப்புமையில் பொருளற்றது" என்று கூறி, "அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வழிவகையை பாதுகாப்பதற்கான முக்கிய விடயங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது." அதே நேரத்தில், அதிகாரத்தில் இருந்து முர்சியை அகற்றுவது "எங்கள் நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இல்லை." என்று தாவூத் கூறினார். "எங்கள் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பைப் பெறுவது ஆகும்; வாக்கெடுப்பிற்கு விடப்படும் முன் அது அனைவருக்கும் திருப்தியை அளிக்க வேண்டும்."

NSF ன் தலைவர்கள் டிசம்பர் 8, சனிக்கிழமை முர்சி அழைத்திருந்த அரசியல் நெருக்கடிக்கான "தேசிய கலந்துரையாடல்" என தலையங்கமிடப்பட்ட கூட்டத்தைப் புறக்கணித்தனர். முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரு நாசர்வாதியான ஹம்தீன் சப்பஹி, மற்றும் முபாரக்கின் கீழ் வெளியுறவு அமைச்சராக இருந்த அம்ர் மூசா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அவர்களுடன் சர்வதேச அணுச்சக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முகம்மது எல்பரடேயும் கலந்து கொள்ளவில்லை.

NSF மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (Revolutionary Socialists) போன்ற அதன்பின் சுற்றும் போலி இடது குழுக்களும் கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும் செவ்வாயன்று வெகுஜன எதிர்ப்புக்களுக்கு புதிய அழைப்புக்களை விடுத்துள்ளன. முஸ்லிம் சகோதரத்துவமும் தன்னுடைய சொந்த முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கும் அதே தினத்தில் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இது புதிய மோதல்கள், புதிய குருதி கொட்டுதல்கள் ஆகியவற்றிற்கு அரங்கு அமைக்கும் சாத்தியப்பாட்டையும் இராணுவத்திற்கு வெளிப்படையாக தலையீடு செய்ய போலிக் காரணத்தையும் கொடுக்கும்.

எகிப்திய ஆளும் உயரடுக்கின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் முடக்கம் சனிக்கிழமை அன்று இராணுவம் ஒரு தீயநோக்கு உடைய அறிக்கை வெளிவிடச் செய்தது; "பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும்" சாத்தியம் உள்ளது என்று அது எச்சரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் முர்சி அதிகாரத்தை ஒருங்கிணைத்தபின் இராணுவத்தின் முதல் பகிரங்க அறிவிப்பாகும். அப்பொழுது அவர் பாதுகாப்பு மந்திரி முகம்மது தந்தவி உட்பட முக்கியத் தளபதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்.

இந்த இராணுவ அறிக்கை கூறுவது: "ஒருமித்த உணர்வைப் பெறுவதற்குச் சிறந்த ஒரே வழி கலந்துரையாடல்தான். அதற்கு எதிராக நடப்பது நமக்கு இருண்ட பாதைக்கு இட்டுச்செல்வதுடன், பேரழிவில் தள்ளும். அதை நாம் அனுமதியோம்." அரசியலமைப்பு வாக்கெடுப்புக் குறித்து உடன்பாடு காணாத நிலை "எவருக்கும் நன்மைகளைத் தராது. நாடு முழுவதும் இதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்."

அரசியல் நெருக்கடியில் இராணுவத்தின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் சனிக்கிழமை அன்று நிகழ்ச்சிகளை நடுவில் நிறுத்தி ஆயுதப்படைகளின் தலைமையில் இருந்து வந்த அறிக்கையை படித்தன. முஸ்லிம் சகோதரத்துவப் பிரதிநிதிகள் அறிக்கையின் "சமப்படுத்தப்பட்ட தன்மை" குறித்து அதை வரவேற்றனர்.

இச்சொற்களை இராணுவப் பிரிவுகள் நடைமுறைப்படுத்தும் வகையில், துருப்புக்கள் ஜனாதிபதி அரண்மனையைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் வரமுடியதபடி மூடிவிடத் திரட்டப்பட்டனர். டாங்குகள், கவச வாகனங்கள் மற்றும் முள்வேலிகள் நிலைப்படுத்தப்பட்டன.

ஓர் எகிப்திய அரசியல் ஆய்வாளர் அம்மர் அலி ஹாசான் அமெரிக்க அரசாங்கம் திரைக்குப்பின்னால் அரசியல் நெருக்கடியில் முக்கியப் பங்கைக் கொண்டிருக்கிறது என்று கூறியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. "ஆயுதப்படைகள், அமெரிக்கா மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு இடையே உடன்பாடுகள் உள்ளன. ஸ்திரப்படுத்தல் பற்றி அவை உடன்பாடு கொண்டுள்ளதற்குக் காரணம் அமெரிக்கா எகிப்தில் முழு ஸ்திரப்பாபாட்டை விரும்புகிறது." என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராணுவ உளவுத்துறைக் கருவியுடன் நல்ல தொடர்பு கொண்டவர் வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ், இன்னும் உறுதியாக முர்சியை ஒபாமா நிர்வாகம் ஆதரிக்கும் பங்கு பற்றி சனிக்கிழமை "கெய்ரோவில் நமது நபர்" என்ற தலைப்பில் கடுமையான கட்டுரையை எழுதியுள்ளார்.

அவர் எழுதியது: "நாம் நேர்மையுடன் பார்ப்போம்: ஒபாமா நிர்வாகம் முர்சிக்கு முக்கிய ஆதரவளிக்குக்கும் அமைப்பாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய இராஜதந்திரம் ஆகியவற்றில் அவருடன் அமெரிக்க அதிகாரிகள் வெகு நெருக்கமாக உழைத்துள்ளனர். வாஷிங்டனுக்கு கடந்த வாரம் சென்றிருந்த முர்சியின் உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதி ஒபாமாவுடன் தங்கள் தலைவர் கொண்டுள்ள நெருங்கிய உறவுகள் பற்றிப் பெருமைபேசி, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி அழைப்புக்கள் காசாவில் போர்நிறுத்தத்திற்கு வகை செய்தன என்றனர்."

முர்சியின் நவம்பர் 22 ஆணைக்குப் பின் அரசியல் நெருக்கடி வெடித்ததால் "ஒபாமா நிர்வாகம் சற்றே விந்தையான முறையில் நிதானமாக உள்ளது" என்று இக்னேஷியஸ் குறிப்பிடுகிறார். "ஒரு தாராளவாத, பொறுத்துக்கொள்ளும் தன்மையுடைய எகிப்திற்கு எதிராக, ஷாரியாவிற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதுபோல் காட்சியளிப்பது வாஷிங்டனுக்கு முட்டாள்த்தனமானதாக இருக்கும். அந்த நிலையில்தான் நிர்வாகம் இப்பொழுது வந்தடைந்துள்ளது" என்று அவர் முடிவாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கைக்கு அது முக்கிய திறவுகோல் என்றாலும், இக்னேஷியஸ் ஒப்புக் கொள்ளாதது என்னவெனில், ஒபாமா நிர்வாகம் ஒருகாலத்தில் அது ஒதுக்கியிருந்த அல்லது அல் குவைடாவின் அமைப்பு என்று அரக்கத்தனமாகச் சித்தரித்திருந்த அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு தடையாக இருந்த லிபியாவின் கடாபியினதும் மற்றும் சிரியாவில் அசாத்தினதும் அரசாங்கங்களை தூக்கிவீச இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுதான்.

மேலும் முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்திய முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு முக்கிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த உண்மையைத்தான் அதன் பிரதித் தலைவரும், முர்சியின் நீண்டகால ஆதரவாளரான கைரட் எல்-ஷடெர், நாட்டின் பெரும் செல்வந்தர்களுள் ஒருவர் என்பது எடுத்துக்காட்டுகின்றது.

சனிக்கிழமை இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளால் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் எல்-ஷடெர் தற்போதுள்ள அரசியல் அமைதியின்மை எகிப்தினுள் மூலதனப் பாய்வை பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார். "கடந்த நான்கு மாதங்களில் நான் எகிப்தில் முதலீடு செய்ய நேர்மையாகவுள்ள ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களைச் சந்தித்துள்ளேன். ஆனால் ஸ்திரமற்ற நேரத்தில் அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யுமாறு நான் ஆலோசனை கூறமாட்டேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com