கிளிநொச்சி மக்களிடமிருந்து சிறிதரன் எம்பி யை பாதுகாக்க மறுக்கும் சிங்கப் பொலிஸார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றிலிருந்து வாபஸ் பெறபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு சிறிதரன் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.
சிறிதரனின் அலுவலகம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது. இவ்வலுவகத்திற்கு 24 மணித்தியாலயங்களும் 2 பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர். கிளிநொச்சி மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்று சென்ற இவருக்கு கிளிநொச்சியில் தங்கியிருப்பதற்கு பாதுகாப்பு எதற்கு என மக்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே பொலிஸார் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் வாட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்று சென்றுள்ள சிறிதரன் அதிக காலத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொழும்பிலுள்ள பங்களாவில் சொகுசாக செலவிடுவதாகவும், கிளிநொச்சி வரும்போது பொலிஸ் பாதுகாப்புடனேயே வந்திறங்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்புடன் வந்திறங்கும் இவரை மக்கள் சந்திக்க முடியாதுள்ளதாகவும் கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கில் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என கூக்குரல் இடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலாவது பாதுகாப்புக்காக தாம் கொண்டு திரிகின்ற பாதுகாப்பு படைகளை வடகிழக்கிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என கேட்கலாம் அல்லவா?
1 comments :
Man who makes his voice in high tone for the tamil general public and why he needs police protection,as he believes that he is the saviour of the tamil society.
Post a Comment