பாராளுமன்ற தெரிவுக்குழவின் அமர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க எதிர்கட்சிகள் கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு இதனை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சி உறுப்பினர்களால் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 பேரை கொண்ட இந்த தெரிவுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, இரா. சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரே எதிர்க்கட்சி சார்பில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த கோரிக்கை கடிதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனக்கு எதிராக குற்றங்களுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஏற்கனவே பதில்களை தாக்கல் செய்துள்ளார்.
தேவையேற்படின் தெரிவுக்குழுவிற்கு குற்றங்கள் தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment