Sunday, December 23, 2012

சூரியனை சுற்றி காணப்பட்ட மர்ம ஒளிவட்டத்தால் மக்கள் அதிர்ச்சி!

சூரியனை சுற்றி ஒரு வகையான வர்ண வட்டம் காணப்படுவது இலங்கைமக்களால் இன்று அவதானிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வர்ண வட்டத்தில் வானவில்லில் உள்ள வர்ணங்களே காணப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த வட்டத்திற்கு வெளியே பிரகாசமான வெளிச்சமும், வட்டத்திற்குள்ளும் சூரியனை சுற்றியும் மங்களான வெளிச்சமும் தென்பட்டது இவ்வாறான ஒளி வட்டங்களை வெற்று கண்களினால் பார்க்கவேண்டாம் என்று தெரிவித்த வானிலை அவதான நிலையம் இது சாதாரணமாக நிகழகூடியதொன்று என்றும் அறிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு இந்த வர்ண ஒளிவட்டம் தென்பட்டதுடன் அதற்கு பின்னர் அந்த வான் பரப்பு மப்பும் மந்தாரமாகவும் காணப்படுவதாக தெரிவித்தானர்.

இலங்கையை சுற்றி அண்மைக்காலங்களில் பல மர்ம சம்பவங்கள் நடைபெறும் நிலையில் இந்த காட்ச்சியும் இன்று தென்பட்டதால் மக்கள் குளப்பத்தில் காணப்படுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com