சீஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு.
சீஷல்ஸ் மக்கள் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிரிகேடியர் லியோபோல் பயெட் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவை அமைச்சில் வைத்து சந்தித்தனர். இச் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளருக்கும் இக் குழுவினருக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இவர்கள் ‘கோல் டயலொக் 2012’ இல் கலந்துகொள்ளும் முகமாக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சந்திப்பின் போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த கொலம்பகேயும் கலந்து கொண்டார்.
இரு தரப்புப்க்குமிடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.
0 comments :
Post a Comment