அரசாங்ம் அழைத்தால் அரச சாட்சியாகச் ஜெனீவா செல்லத் தயாராம் மாநகர சபை மேயர்
அரசாங்கம் அழைத்தால் மீண்டும் ஜெனிவாவிற்கு அரச சாட்சியாக செல்வதற்தகு தயாராக உள்ளாராம் என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்ம் சார்பாக யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அரச தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க சென்றிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜெனிவாவில் மீண்டும் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. மீண்டும் அரசாட்சியாக தாம் செல்லத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு அரசாங்கம் அழைத்தாலே செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
1 comments :
She seems to be very bold,efficient
and has the capacity of handling every struggling situation.Jaffna needs her services for ever.
Post a Comment