Friday, December 28, 2012

வன்னியில் தொடரும் அழை மழை, குளங்கள் நிரம்பி வழிகின்றது-பல ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு

.
வன்னியில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு பெரும்பாலான வீடுகள் சேறும் சகதியுமாக நீரூறி மக்கள் குளிருக்குள் விறைத்தபடி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் காhரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள இடம்பெயர்ந்துள்ளனர்.

பல வீதிகளில் திருத்தப்படாத சீரற்ற பாலங்கள் ஏராளம் காணப்படுவதால் பாதுகாப்பற்ற போக்குவரத்து இடம்பெறுவதுடன், பல பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவு வெள்ளம் காரணமாக ஏனைய பகுதிளுடன் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பெரும்பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் இரணைமடுக்குளம், கிளிநொச்சி குளம், கனகாம்பிகைகுளம், புதுமுறிப்புக்குளம், அக்கராயன்குளம் உட்பட முக்கிய குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன.



கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.இடம்பெயர்ந்த மக்கள் . இந்த இரு மாவட்டங்களிலும் சுமார் 16 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு, தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.


எனினும் இவ்விரு மாவட்டங்களிலும் சுமார் 2500 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என மாவட்டச் செயலகங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.





No comments:

Post a Comment