ஜப்பானின் கிழக்கு கடலில் கடும் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் கிழக்கு கரையோரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த பூமியதிர்ச்சியானது ரிச்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது.
இந்த பூமியதிர்வின் மையம் கமியாஷிக்கு 245 கிலோமீற்றர் (150 மைல்கள்) தென்கிழக்கில் 36 கிலோமீற்றர் ஆழத்தில் காணப்பட்டதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த பூமியதிர்வு உணரப்பட்டதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கிழக்கு கரையோரத்திலுள்ள கடலில் ஒரு மீற்றர் அளவுக்கு அலைகள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
.
0 comments :
Post a Comment