மீண்டும் இத்தாலியின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பேர்லுஸ்கோனி.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனி மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இத்தாலியின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறலாம் என ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய பிரதமர் மரியோ மோண்டியின் ஆட்சி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார் பேர்லுஸ்கோனி .
76 வயதான பேர்லுஸ்கோனி, கடந்த நவம்பர் 2011 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாம செய்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி சிக்கியிருந்ததாலும், வரி ஏய்ப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாலும், பேர்லுஸ்கோனி பதவி விலக நேரிட்டது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் உள்ளூர் நீதிமன்றம், பேர்லுஸ்கோனிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பாலியல் தொழிலாளி ஒருவருடனான தொடர்பு குறித்தும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இத்தாலிய பிரதமராக மூன்று தடவை பதவி வகித்தவர் பேர்லுஸ்கோனி, இதன் மூலம் தனிப்பட்ட வகையில் பாரிய சொத்து சேகரித்ததாகவும் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில், 1994 இல் பேர்லுஸ்கோனி செயற்பட்டது போன்று தற்போதைய பிரதமர் செயற்படுகிறார் இல்லை என அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருவதாகவும், இதையடுத்தே பேர்லுஸ்கோனி இம்முடிவுக்கு வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment