பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் இன்று முதல் ஆரம்பம்
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் இன்று 27ஆம் திகதி முதல் பெப்பிரவரி 28 ஆம் திகதி வரை மூன்று குழுக்களாக வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 பயிற்சி முகாம்களில் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதில் முதலாவது குழுவிற்கு இன்று முதல் ஜனவரி 12ஆம் திகதி வரையும், இரண்டாவது குழுவிற்கு ஜனவரி 16 ஆம் திகதி முதல் பெப்பிரவரி 01ஆம் திகதி வரையும், மூன்றாவது குழுவிற்கு 12ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
0 comments :
Post a Comment