Thursday, December 27, 2012

யாழில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர், கைதானவர்கள் பூசாவில் -பொலிஸ் பேச்சாளர்

கடந்த கால பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புய பலர் இன்னமும் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாஷந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இதுவரையில் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 2010ஆம் ஆண்டிற்கு முன்னர் பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என தெரியவருகின்றது.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள்; பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. புலனாய்வு பிரிவு கஷ்டப்பட்டு கைது செய்யும் , பின்னர் டக்லஸ் , ரிசார்ட் பதியுதீன் , கருணா போன்றோர் காசு வாங்கி கொண்டு விடுவித்து இந்தியாவுக்கு அனுப்புவர் , அங்கு போன புலிகளும் மீண்டும் தங்கள் வேலையை தொடங்குவர் , ஆகா மொத்தத்தில் கொட்டபாயே முட்டாள் ஆக்கப்படுவார்.

    ReplyDelete