புலிச்சந்தேக நபர்களின் வழக்குகளை துரிதப்படுத்த நான்கு மேலதிக நீதிமன்றங்களாம்.
ஐ.நா பிரதிநிதிகளிடம் ஹக்கீம்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஜப்பான், நைஜீரியா, ரொமேனியா, பங்களதேஷை போன்ற நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது தமிழ் கைதிகள் தொடர்பிலான வழக்குகளை துரித கதியில் நிறைவு செய்வதற்காக, நான்கு மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசினால் கிரமமாக அமுல்ப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை, ஜனாதிபதி செயலணியினால் அமுல்ப்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வறிக்கையில் உள்ளடங்கியுள்ள சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பில், நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் சட்டத்துறை சார்ந்த சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டவரைவினை தயாரித்து, பாராளுன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், அமைச்சரவை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளாதாக தேசியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment