Monday, December 17, 2012

USA ல் பள்ளிச் சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!!

வெள்ளிக்கிழமை கன்னெக்டிகியூட் நியூடவுன் பள்ளியைச் சேர்ந்த 20 அப்பாவிச் சிறுவர்களையும் அதிபர் ஆசிரியர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 26 பேரையும் பலி வாங்கிய துப்பாக்கிச் சூடு பல வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவை உலுக்கிய மிகக் கொடூரமான சம்பவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூடவுன் பள்ளிக்குள்ளே நுழைந்து அப்பாவிச் சிறுவர்கள் மீதும் அதிபர் ஆசிரியர்கள் மீதும் வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய 20 வயதேயாகும் ஆதம் லன்ஷா எனும் இளைஞன் தனது சிறுவயதில் நற் குணங்கள் நிறைந்தவனாகவே இருந்தான் என்கிறார்கள் அவனை பற்றி தெரிந்தவர்கள்.

இது குறித்து ஆதம் லன்ஷாவின் உறவினர் ஒருவர் கூறுகையில் ஆதம் சிறுவயது முதலே அமைதியான சிறுவன் எனவும் அவன் வன்முறையற்றவன் எனவும் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் உடையவன் எனவும் கூறியிருந்தார்.

ஆதம் லன்ஷா 12 சிறுமிகள் 8 சிறுவர்கள் அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் மற்றும் தனது தாய் ஆகியோரைக் கொலை செய்து விட்டுத் தன்னைத் தானேயும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இவன் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரு ரைஃபிள் உட்பட 3 துப்பாக்கிகளைப் பாவித்துள்ளான். இவை அனைத்தும் சட்டபூர்வமாக இவனின் தாயின் பெயரில் பதிவு செய்து வாங்கப்பட்டவை என்பது அதிர்ச்சியான செய்தியாகும்.

தற்போது ஆதம் லன்ஷாவின் சகோதரனும் தந்தையும் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதேவேளை பலியான 8 வயதுக்கும் குறைவான அத்தனை சிறுவர் சிறுமிகளின் படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இச்சிறுவர்கள் ஒவ்வொருவர் மீதும் கொடூரமாக 11 புள்ளெட்டுக்கள் பாய்ந்துள்ளன.

மேலும் பலியான ஆசிரியர்களில் ஒருவர் சில சிறுவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களை ஒரு அறையில் அடைத்ததுடன் தனது உயிர் போகும் வரை ஒரு சிறுவனை அணைத்து துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றிய சம்பவம் மேலும் உணர்ச்சிகரமாக பேசப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com