பஸ் மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் படுகாயம் யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சிறு பெண் பிள்ளை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் யாழ்.வேம்படிச் சந்தியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற பெற்றுள்ளது. இதில் 8 வயது சிறு பிள்ளையொருவர் ஒரு மதபோதகரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் மிக வேகமாக வீதியைக் கடக்க முயன்றமையே விபத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment