Wednesday, December 19, 2012

ஜந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து அரச தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கத் தாதியர்கள் இன்று புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாதியர் ஆட்சேர்ப்பு முறை வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது..

தாதியர்களின் விடயத்தில் மாகாணசபைகளுக்கு பரந்தளவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வேலையில் சேர்ந்து 10 வருடங்களுக்குள் மாற்றம் கோரமுடியாது எனவும் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரத்தியேகக் கொடுப்பனவு, அபாயக்கொடுப்பனவு, அரசாங்கத்தினால் வெளியிட்ட 1979ஆம் இலக்க சுற்றறிக்கையினை இல்லாமல் செய்தல், மாகாண ரீதியில் 70 வீதமும் தேசிய ரீதியில் 30 வீதமும் ஆட்சேர்தல் விதிமுறையினை இல்லாமல் செய்வதோடு தரம் – 1, தரம் 2 இற்கு இதுவரை பதவி உயர்வு வழங்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளாக நிர்ணயித்தல் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கையினை முன்வைத்து தாதியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com