மாவட்ட மற்றும் மஜீஸ்திரேட் நீதிபதிகளை ஒருசேர அழைப்பு விடுக்கும் பாரம்பரியம் ஒன்று கடந்த காலங்களில் இருக்கவில்லையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக தேவையேற்படின் நீபதிகள் தனித்தனியாக அழைக்கப்படுவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதிபதியொருவர் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமூகமளிப்பதனால் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையொன்று இருப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட மற்றும் மஜீஸ்திரேட் நீதிமன்ற அதிகாரிகளின் வருடாந்த கூட்டம் முறைமையான திட்டத்தின் கீழ் நடைபெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வருடத்தின் இறுதியில் நீதிமன்ற விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர் வெள்ளி கிழமைகளில் இக்கூட்டம் இடம்பெறுவது வழக்கம் எனவும் தெரிவித்தார்.
ஏதாவது சந்திப்பொன்று நடைபெற வேண்டுமானால் அச்சந்திப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னரே நடைபெற வேண்டும். நீதிமன்ற செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் செயல்படுவது மாவட்ட மற்றும் மஜீஸ்திரேட் நீதிமன்றங்கள் பின் பற்றி வரும் நடைமுறையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment