நாடாளுமன்றிலிருந்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு- ஆளுங்கட்சியின் தொந்தரவு அதிகரித்ததால்
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினரான ஐ.தே.க. எம்.பி ஜோன் அமரதுங்க, நாடாளுமன்றத்தில் உரையாற்ற முற்பட்ட வேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவரை உரையாற்ற விடாது கூச்சலிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்த ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத், ஆளுங்கட்சியினரின் கூச்சலைத் தாங்க முடியாமல் தனது உரையை நிறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரைகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் தொந்தரவு விளைவித்ததை அடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment