Thursday, December 6, 2012

பிரதம நீதியரசரின் சொத்து விபரங்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழவிடம் சமர்ப்பிப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கால அவகாசம் வழங்கு தொடர்பில் தெரிவுக் குழுவினர் சிந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

11பேர் அடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் இன்று சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, நேற்று கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க பிரதம நீதியரசருக்கு கால அவகாசம் வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவினால் 5 வார கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை அவர் மீண்டும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் தோன்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com