மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகையான பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதோடு அனர்த்தங்கள் ஏற்படவுள்ளதாக பீதியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.பெருமளவான பாம்புகள் நேற்றுதிங்கட்கிழமை மாலை முதல் ஓடியதை காணக் கூடியதாக இருந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளதோடு இந்த பாம்புகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டு மூன்று அல்லது நான்கு அடி நீளமானவைகளாக காணப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறு கல்லடிப்பாலத்தில் பெருந்தொகையான பாம்புகள் படையெடுத்தது.
இந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரும் இவ்வாறு கல்லடிப்பாலத்திற்கு கீழும் பெருந்தொகையான பாம்புகள் படையெடுத்துமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment