Sunday, December 2, 2012

வடக்கின் அபிவிருத்தியுடன் கைகோருங்கள்! புலம்பெயர் தமிழருக்கு பசில் மீண்டும் அழைப்பு.

வடக்கை அபிவிருத்தி செய்து நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் செயற்பாடுகளுக்கு  பங்களிப்பு வழங்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

வவுனியா, செட்டிக்குளம் அல் அக்ஷா முஸ்லிம் கல்லூரியின் புதிய 3 மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகளையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இக்கட்டிட நிர்மாணிப்புக்கென 250 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிர்மாண பணிகளுக்கான அனுசரணையை வழங்குகின்றது. 

அங்கு பேசிய அமைச்சர், புதியது பழையது என்ற பேதமில்லை. மீள்குடியேற்றப்படும் சகலருக்கும் ஒரே தரத்தில் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி எமக்கு உத்தரவிடடுள்ளார்.  இன்று மனித உரிமை என்ற போர்வையில் குரல் எழுப்பும் ஒரு சிலர் ஐக்கிய நாடுகள் உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் உணவுகரளையும் திசை திருப்ப முயற்சித்தது மாத்திரமன்றி இரு கூறுகளாக பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்தனர். குரோதமும் மன கசப்புக்களையும் ஏற்படுத்த கூடிய அறிக்கைகளை விடுத்து வடபுல சமாதானத்தை சீர்குலைக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய முறையில் இன்று வடபுலத்தில் அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  திருமதி சீமா இலாஹி பலூஜ், அமைச்சர் றிஷாட் பதியூதின், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com