Monday, December 31, 2012

கவர்ச்சி உடையில் தொடைகளுக்கு இடையில் இ. சாதனங்களை கடத்திய பெண்கள் கும்பல் கைது

LED> LCD வகைகளைச் சேர்ந்த கணணிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை கவர்ச்சியினால் கொள்ளையிட்ட பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்றை பொலிஸார் iது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக்குழு நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான பெறுமதியை உடைய இலத்திரனியல் சாதனங்களை மிகவும் நூதனமான முறையில் கொள்ளையிட்டுள்ளது.

இவர்கள் தமது கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் LED> LCD வகைகளைச் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொண்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதற்காக கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் போல பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவருகின்றது.

இந்தக் கும்பலில் சேரவிரும்பும் பெண்களுக்கு இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட சில பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கியுள்ளனர்.

கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

சுரங்கீ என்ற 25 வயதான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார்.

இக்குழவில் இணையும் பெண்களுக்கு முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் தொடைகளுக்குள் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சியும் அளிக்கப்படுகின்றதாம்.

இக்குழவினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களைக் கொள்ளையிட்டுள்ளது.

மீரிகமவைச் சேர்ந்த சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இவர்களுக்கு உதவிய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com