விஞ்ஞான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? சி.ஜ.டி யினர் விசாரணை
நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதா? என்பது தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினின் வேண்டுகோளைத் தொடர்ந்தே இவ்விசாரணைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும், விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்வி,பதில் படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை நேற்று 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பஹா பிரதேசத்திலேயே இந்த மாதிரி வினாத்தாளை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 comments :
It's really sorrowful to hear that the standard of education of the country stedily worsening.
Post a Comment