புத்தளத்தில் விசித்திர மீன் மழை!
புத்தளம் - ஆசிரிகம பகுதியில் இன்று (27.12.2012) பிற்பகல் மழை பெய்ததோடு மழையுடன் சேர்த்து மீன்கள் விழுந்துள்ளன தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை 30 நிமிடங்கள் பெய்யாது இருந்த சமயம் இந்தமீன் இதிகளவில் விழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீடத்து வரும் காலநிலை மாற்றத்தால் நாட்டின் பல பாகங்களிலும் மீன் மழை பெய்து கொண்டிருக்கும் போதே இன்றும் இந்த மீன் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளமைக்கு மாறாக பெய்த மீன் மழையால் இந்த பகுதி மக்கள் சற்று குளப்பம் அடைந்து காணப்படுகின்றனர் காரணம் கடந்த காலங்களில் மீன் மழை மழையுடன் சேர்ந்தே பெய்துள்ளது ஆனால் முதல் முறையாக மழை இல்லாமல் மீன்மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment