பொலிஸ் சார்ஜென்டை அடித்துக்கொன்ற நால்வருக்கு மரண தண்டைனை!
கடந்த 2008 நவம்பர் மாதம் தேடுதல் நடவடிக்கைக்கு சென்றிருந்த பொலிஸ் சார்ஜன் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நால்வருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இத்தீர்ப்பை இன்று (13) அளித்துள்ளார்.
2008 நவம்பர் மாதம் 16ம் திகதி சட்டவிரோத மது தயாரிப்பு நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் சார்ஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையுடன் தொடர்புபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கேகாலை - ஹரிவட்டுன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நால்வர் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுளளது.
1 comments :
Every action has a opposite and equal reaction.God is actively watching everything and He decides the the fate of the offenders.
Post a Comment