Wednesday, December 5, 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக பேசுவதைத் தவிருங்கள் சபாநாயகர் கோரிக்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு பற்றி பேசுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயர் சமல் ராஜபக்ஷ ஊடகங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, நீதிபதிகளுடன் பிரதம நீதியரசர்சந்தித்துப் பேசியமை தொடர்பில் இன்று விமர்சித்ததைத் அடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் யார் பேசினாலும் அது நல்லொழுக்கமாக அமையாது.

இந்த வியத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழு மட்டுமே கையாளும், இந்த விடயம் பற்றி வேறு யாரும் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்;. அத்துடன் இந்த விடயத்தில் ஊடகங்களும் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment