இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கக்கோரி யாழில் தமிழர் ஒருவர் சாகும்வரை உண்ணவிரதம்.
இலங்கைக்கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வருகின்றனர். வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இச்செயல் தொடர்பாக இலங்கை வருகை தரும் இந்திய உயரதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள கொண்டுவந்தும் இதுவரை எவ்வித நிவாரணங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் இந்நபர் சாகும் வரை உண்ணாவிரதத்தினை
ஆரம்பித்துள்ளார்.
கடந்த 10 திகதி முதல் மூன்றாவது நாளாக இப்போராட்டத்தினை தொடரும் இந்நபர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் ஆவார். யாழ்.குருநகர் பகுதியில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலேயே இவர் உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
1. இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு சவால் விடும் வகையில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
2. போரால் பாதிக்கப்பட்ட பிரதேச மீனவர்களின் சங்க நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாமல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை கையாண்டு கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதுடன் எமது மீனவர்களின் வளங்களை சூறையாடும் வெளிப் பிரதேச மீனவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
ஏ னும் தனது இரு கோரிக்கைகளுக்கும் உரியவர்களிடம் இருந்து பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் இந்த போராட்டத்தில் தான் உயிரை விடவும் தயாராக இருப்பதாகவும் வி.சகாதேவன் தெரிவிதுள்ளார்.
இவரது இக்கோரிக்கை தொடர்பாக இந்திய தூதுவராலம் , இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என்பவற்றிற்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை எந்தவொரு தரப்பிலிருந்தும் எவ்வித பதில்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இவரது அமைப்பினைச் சார்ந்தோர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தனர்.
1 comments :
This is a really genuine attempt to
wipe out the indian fishermen from the Srilankan waters.
Post a Comment