நாட்டின் பல பகுதிகள் மழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டது.
இம்மக்களின் அவலங்களை படம்பிடித்து காட்டும் அரசியல்வாதிகள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கே சென்று படங்களைபிடித்து விட்டு அள்ளை கொள்ளையாக எழுத்துக்களும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலும் ஆங்காங்கே படையினராலும் வழங்கப்பட்ட உதவிகளை தவிர எந்த உதவியும் மக்களை சென்றடையவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
எது எவ்வாறாயினும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு நேற்று பிற்பகல் தொடக்கம் கொழும்பிலிருந்தும் பிற தரப்புக்களிடமிருந்து உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கடமை செய்யவேண்டிய நேரத்தில் சுருண்டு கொண்டு படுக்கக்கூடாது என வந்த அன்புக்கட்டமைகளை தொடர்ந்து, இன்று மதியமளவில் கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் சென்று ஒரு கூடையில் கொண்டு சென்ற சோத்துப்பார்சல்கைளையும் ஒரு பாயையும் கொடுத்துவிட்டு படம்பிடித்து வந்தாகவும் அறியக்கிடைக்கின்றது. இதற்கான படங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தங்கள் ஊதுகுழல் இணையங்களில் ஏற்றப்படலாம் என்பது வேறு கதை. அத்துடன் நான் ஏன் இந்த மக்களுக்கு செய்யவேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குதானே வாக்கு போட்டவர்கள், கூட்டமைப்பு செய்யட்டுமே என்று சொன்னாலும் சொல்லலாம்.
இதேநேரம் கிழக்கு மக்களின் அவலங்களை காண்பித்து புலம்பெயர் தேசத்தில் பிச்சையெடுப்புக்கு தயார் படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கைகள் விடுவதையும் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுவதையும் தவிர எதுவும் செய்தாக இல்லை .
வெள்ளம் அடித்துச்சென்று மீட்கப்பட்ட இருவரின் உடலங்களை அரியநேந்திரன் பார்வையிடட்டாராம் என்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இவ்வாறு செய்தி வெளியிட்ட பெருச்சாளிகளிடம் அரியநேந்திரன் உடல்களை பார்வையிட்டால் அவர்களின் உயிர் வந்துவிடுமா எனக்கேட்பதை தவிர வேறு வசனங்கள் இல்லை.
இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வழமான வீடுகளில் வசிக்கின்ற மேற்தட்டுவர்க்கம் எட்ட நின்று எக்காளம் விடுகின்றது.
தேர்தல்கள் வந்தால் எத்தனையோ விளையாட்டுக்கழகங்கள், ஒன்றியங்கள், சங்கங்கள் என வெளியே வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு வக்காலத்துவாங்கி அறிக்கைகள் விடுவர். வாக்குவேண்டி வேண்டுதல் விடுவர். எங்கே இந்த இளைஞர்கள். அரசியல்வாதிகளுக்கு வாக்கு கேட்டு மக்களிடம் செல்லும் மேற்குறிப்பிட்டோரால் ஏன் இச்சந்தர்ப்பத்தில் மக்களுக்கு உதவ முடியாது.
இவ்வாறான அனர்த்தம் நிகழ்கின்றபோது எங்கே பணம் வருகின்றது என வாயை பிழக்கின்ற அரசியல் வாதிகள் ஏன் தமது அடிவருடிகளை களம் இறக்குவதில்லை அவர்களை கொண்டு சிரமதானங்களைச் செய்ய முடியும். பாதிக்கப்பட்ட வீடுகளை, வீதிகளை, தோட்டங்களை புனரமைக்க முடியும்.
No comments:
Post a Comment