Saturday, December 15, 2012

வடமாகாண ஆசிரிய இடமாற்றத்தில் மோசடி- இடமாற்றங்கள் ஆளுநர் சந்திரசிறியினால் இரத்து

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் யாவும் வடமாகாண ஆளுநர் மேஜனர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இடமாற்றத்திலுள்ள மோசடிகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்தே இவ்விடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இத்தகவலை உறுதிப் படுத்தியுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சினால் யாழ். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பெயர் பட்டியலில் தகுதியான ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெறாத காரணத்தினாலேயே இவ்விடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் குறித்து எதிர்வரும் 22ஆம் திகதி தொழிற்சங்கம் மற்றும் துறைசார்ந்த ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் தேசிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு, தொழிற்சங்கங்களின் ஊடாக இடமாற்றத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் செயலளார் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com