குத்துச்சண்டை வீரராக மாறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிளிண்டாஃப் தற்போது குத்துச்சண்டை வீரராக புதிய அவதாரமெடுத்துள்ளார். 2009ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த பிளிண்டாஃப், அதன் பின்னர் குத்துச்சண்டைகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவர் பங்கேற்ற முதல் குத்துச்சண்டை போட்டி நேற்று மேன்செஸ்டர் நகரில் நடைபெற்றது. ஹெவி வெயிட் பிரிவில் அமெரிக்காவின் ரிச்சார்ட் டாசனுடன் மோதிய பிளிண்டாஃப், ஆட்டத்தின் முடிவில் 39-38 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது குத்துச்சண்டை எதிர்காலம் பிரகாசமாகியுள்ளது. பிளிண்டாபுக்கு 34 வயது தான் ஆகிறது. இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளராகவும், கேப்டனாகவும் விளையாடியிருந்தார்.
எப்படி ஒரு கிரிக்கெட் வீரர் பாக்ஸிங்கில் சாதிக்க முடியும் என பார்ப்பதற்காகவே மான்செஸ்டர் அரீனா நிரம்பியிருந்ததாம், வந்தவர்களில் பெரும்பாலானோர் பாக்ஸிங் ரசிர்கர்கள் அல்ல. பிளிண்டாஃபின் கிரிக்கெட் ரசிகர்கள் என்கிறார்கள். மத்திவ் ஹொகார்ட், ஸ்டீவ் ஹாமின்சன் போன்ற சக கிரிக்கெட் வீரர்களும் அரங்கிற்கு வந்து ஃபிளீண்டாப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment