மாத்தளையிலும் பச்சை மழை பிரதேச மக்கள் அச்சம்
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் பலவிதமான மழையின் தொடர்ச்சியாக மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பச்சை மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து நிமிடங்கள்வரை பெய்த இம்மழை பின்னர் ஓய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை மழையினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் வவுனியாவிலும் பச்சை மழை பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment