Friday, December 14, 2012

'உசாவியே நாடகம் நடனவா' அவமரியாதை குறித்து பிரதம நீதியசர் சபாநாயகருக்கு முறைப்பாடு

'உசாவியே நாடகம் நடனவா' (நீதிமன்றத்தில் நாடகமாடுகிறார்), 'பபா வகே ஹிட்டியட பபா வகே வெட நே' (குழந்தை போல் இருந்தாலும் வேலைகள் குழந்தை போல் இல்லை) போன்ற தகாத வார்த்தைகளால் தெரிவுக் குழுவின் முன் ஆஜரான போது தன்னை அமைச்சர்கள் திட்டியதாக பிரதம நீதியரசர் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜரானபோது தன்னை அவமானப்படுத்திய அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடித்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்படி தெரிவுக்குழு அங்கத்தவர்களினால் பயன்படுத்தப்பட்ட சொற்களை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் சார்பில் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினால் சபாநாயகருக்கு இந்த கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தவர்களில் சிலர், 'பிஸ்ஸு கேணி' (பைத்தியக்காரி), 'அபி மே நோனவா மெத்தன தியாகென மடவனவா' (நாங்கள் இவருக்கு இவ்விடத்தில் வைத்து சேறு பூசுவோம்), 'பபா... நே... பபா {ஹகுங் (பாப்பா... இல்லை இல்லை கைக்குழந்தை), 'உசாவியே நாடகம் நடனவா' (நீதிமன்றத்தில் நாடகமாடுகிறார்), 'பபா வகே ஹிட்டியட பபா வகே வெட நே' (குழந்தை போல் இருந்தாலும் வேலைகள் குழந்தை போல் இல்லை) போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  December 14, 2012 at 8:03 PM  

It' really shame to make ugly comments on the CJ.Why not they observe decency standards of behaviour in society that people think are acceptable.These are basic decensies of civilized society

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com