த.தே. கூட்டமைப்பு வசமுள்ள கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக வர்த்தகர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பரந்தன் வர்த்தக சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகின்றது. வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு வைக்காமையினாலேயே இப்போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் குடிநீர், சுகாதாரம்,மின்சாரம் பேருந்து நிலையம் அமைத்தல், மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு முன்வைக்க கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment