தமிழரை படு குழிக்குள் தள்ளுவதில் யாழ் ஊடகம் முன்னிலையில்!
பல்கலைக் கழக மாணவர்களின் கல்வியைத் தமது சுயநல அரசியலுக்காய் குழப்பியதும், இராணுவத்தில் சேரப்போய்த் திரும்பிய தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையை அவதூறுகளால் சீரழித்ததும் இரண்டு தமிழ் அரசியல் வாதியும் உதயன் பத்திரிகையுமே என்பதை பல்கலைக்கழக சமூகமும் மருத்துவ சமூகமும் வெளிப்படுத்தியுள்து.
அரசியல்வாதிகளின் பிரச்சாரத்துக்குத்தான் இந்தபத்திரிகையிருப்பதுடன் மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கவே இந்த உதயன் பத்திரிகை ஆவேசக் கருத்துகளின் பின்னாலிருந்த தீமைகளை காலங்கடந்து தான் நமது சமூகம் உணர ஆரம்பித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியவிடயமாகும்.
ஒரு 15 நாட்டகளுக்கு பத்திரிகை விற்பனை குறைகின்றது என்றால் குறித்த பத்திரிகையும், பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல்வாதிகளும் இணைந்து கதைத்து ஒரு புரளியை முதலில் உருவாக்கி பல்வேறு தரப்பு வாதம் என செய்திகளைப் போட்டு தமிழ் மக்களனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்து செய்திகள் ஏதாவது வருமா என காத்திருக்க இதனை ஏனைய ஊடகங்களும் ஒருஊடகம் சொன்னதை அப்படியே ஒப்புவிப்பதும்தான் இன்று நடக்கிறது.
பத்திரிகையில் போடப்படும் செய்தியின் யதார்த்தம் என்ன, இந்த செய்தியால் ஏற்படப்போகும் பாதிப்புஎன்ன, இந்த செய்தியின் மூலம் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வினை நோக்கி நகராமல் கடந்த 30 ஆண்டுக்கு முந்திய காலத்தை நோக்கி ஈட்டு செல்ல முயல்கின்றன யாழ்ப்பாணத்து பத்திரிகைகள்
இந்த நிலைமை விளங்கியவர்களும் இவர்களை எதிர்த்து எதுவும் கேட்க முடியாதவாறு அவர்களையும் இந்த எதிர்ப்பு உணர்ச்சிப் பிரவாக நீரோட்டத்திற்குள் அமுக்கிவிடுகிறார்கள். இராணுவத்திடமிருந்து திரும்பி வந்த பெண்கள், தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியே சொல்ல முடியாதவாறு படையினரால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று பிபிசிக்குப் பகிரங்கமாகப் பேட்டியளித்த அரசியல்வாதியை திருப்பிக் கேள்வி கேட்கமுடியாததாக காணப்படுகிறது தமிழ் சமுகம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லதயாராய் இல்லை இன்றைய சமூகம்.
இந்த பெண்கள் எதிர்பார்த்துச் சென்ற பணி இல்லாததால் தங்கள் விருப்பமின்மையைச் சொல்லி பாதிப்புகள் எதுவுமின்றியே அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள் என்பதைச் சொன்னால்போதும் அவர்கள் அரசுக்கும் இராணுவத்துக்கும் வக்காலத்து வாங்குபவர் என்றும், அவர்தான் தமிழ்மக்களின் துரோகிஎன்று துரோகிப்பட்டம் கட்டிவிடும்.
தமிழர் உள்ள பிரதேசத்தில் எல்லாம் அநியாயங்கள் நடக்கவேண்டும்,கலவரங்கள் நடக்க வேண்டும், மக்களிடையே எதிர்ப்பும் பகையும் இருந்தால்தான் தங்களால் சுயலாப அரசியல் செய்யவும், தமது ஊடகத்தை விற்பனையில் முதலாவதாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றார்கள் என்பதை தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் இருப்பதை தெரிவிப்பதற்காக கலவரம், பதற்றச் சூழ்நிலையை ஏற்படுத்தல், அடி வாங்குதல், காரை உடைத்தல், கல்லெறி வாங்குதல் போன்ற எளிய உத்திகளால் மக்களிடம் கோபமும் ஆவேசமும் பெருகும்படி செய்துகொண்டே இருப்பதுடன் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்காக மக்களைத் திரட்டாது தங்க்குள்ளேயே விரேதிகளை வளர்த்துக்கொண்டு இரண்டு திசைகளில் செயற்படுவார்களே தவிர பிரச்சினையை தீர்ப்பதற்கான கோரிக்கையை வைக்கும் முயற்சிகளைச் செய்யாது மக்களைக் குழம்பிக்கொண்டே இருப்பார்கள் தமிழ் மக்களே உங்கள் கண்ணைத்திறந்திருங்கள் உங்களை ஏமாற்றவென பல தமிழ் அரசியல் நாட்டி இருக்கிறார்கள் கவனம் தமிழா.....
1 comments :
Why not the readers unable to distinquish in between genuine and fake.It's big question among us how long it will them do that?
Post a Comment