Wednesday, December 5, 2012

தவிசாளர் குழுவிலிருந்து அஸ்வர் எம்.பி அதிரடியாக நீக்கம்

நாடாளுமன்றத்தில் தவிசாளர் குழாமிலிருந்து ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.அவைக்கு தலைமை தாங்கும் போது அஸ்வர் பக்கசார்பாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சியினர் செய்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த குழாமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அவைக்கு சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் தலைமை தாங்காத பட்சத்தில் தவிசாளர் குழாமிலுள்ள ஒருவர் அவைக்கு தலைமை தாங்குவார். அந்த குழு உறுப்பினர்களை தனது விருப்பத்தின் பேரில் நியமிப்பதுடன் நீக்குவதற்கான அதிகாரமும் சபாநாயகருக்கு உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com